முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ் கடற்றொழிலாளர்கள் இருவர் மாயம் : தேடுதல் பணிகள் தீவிரம்

புதிய இணைப்பு

கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த
இரு கடற்றொழிலாளர்களையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கடற்றொழிலாளர்கள் காணாமல்போயுள்ள விடயம் தொடர்பில் அமைச்சின் கவனத்துக்கு
கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள
பிரதானிகளுடன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்தநிலையில் கடற்றொழிலாளர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கியதற்கமைய
தேடுதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் (J.Suthaagaran) தெரிவித்துள்ளார்.

இது குறித்து கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு (Department of Fisheries and Aquatic Resources) அவர் இன்று (17) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

 ஊர்காவற்துறையில் இருந்து சென்றவர்கள்

அந்தக் கடிதத்தில், ‘தோமஸ் டக்ளஸின் படகில் இரண்டு கடற்றொழிலாளர்கள் நேற்று முன்தினம் (15.03.2025) மாலை 3.00
மணிக்கு ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து IDAY-A-0035 JFN
நீலம் மற்றும் வெள்ளை நிற படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.

யாழ் கடற்றொழிலாளர்கள் இருவர் மாயம் : தேடுதல் பணிகள் தீவிரம் | 2 Fishermen Missing Who Went Fishing From Jaffna

ஆனால் குறித்த இருவரில் யாரும் இன்னும் கடற்கரைக்கு திரும்பவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 46 வயதான விமலேந்திரன் ஞானராஜ் மற்றும் 54 வயதான லிகோரி பூலோகதாசன் ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

மேலும் காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் பு. கஜிந்தன் 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.