இலங்கைக்கு வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி 20 ஆயிரம் மெற்றிக் தொன் வெங்காயத்தை முதற்கட்டமாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அரச வர்த்தக கூட்டத்தாபனத்தின் (Sri Lanka State Trading Corporation) தலைவர் ரவீந்ர பெர்ணான்டோ (Ravindra Fernando) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான விலைமனுக் கோரல் நாளையுடன் நிறைவடைகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெங்காய தட்டுப்பாடு
தற்போது, சந்தையில் வெங்காயத்துக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் 30 ஆயிரம் மெற்றிக் தொன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது.
கடந்த சில நாட்களாக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட 63 பொருட்களுக்கான தற்போதைய இறக்குமதி வரியை எவ்வித திருத்தங்களும் இன்றி பேணுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.