பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக தங்களுக்குத் துப்பாக்கிகளை வழங்குமாறு 20
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம்
இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகவும், இந்தக் கோரிக்கைகள் பாதுகாப்பு
அமைச்சுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸ்மா அதிபர் தலைமையில்
கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர்
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் துப்பாக்கிகளை வழங்குவது
குறித்து ஆராய்வதாகவும் கூறியுள்ளனர்.
இருப்பினும், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும்
துப்பாக்கிகளை வழங்குவது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றும்
கூறப்படுகின்றது.
தற்போதுள்ள அச்சுறுத்தல்களைப் பகுப்பாய்வு செய்த பிறகு துப்பாக்கிகளை
வழங்குவது குறித்து தீர்மானம் எடுக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

