2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த விடயத்தினை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.
அதன்படி, மே மாதம் 02 ஆம் திகதி முதல் மே 16 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி
இதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 149,964 பாடசாலைப் பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் 27,624 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
177,588 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 64,73% பேர் பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இடைநிறுத்தப்பட்ட பெறுபேறுகள்
இதற்கிடையில், 420 பாடசாலைப் பரீட்சார்த்திகள் உட்பட 456 பரீட்சார்த்திகளின் பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு 222,774 பாடசாலை பரீட்சார்த்திககளும் 51,587 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.