ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வைத்து இந்த நாட்டை பொறுப்பேற்று மீட்டுகொடுத்த ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (25) கொட்டகலை (Kotagala) சீ.எல்.எப்.மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த போது நாட்டை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) அழைப்பு விடுத்த போதிலும் எம்மிடம் 53 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்
ஆகவே, அடுத்த தலைமுறையை விட அடுத்த தேர்தல் தொடர்பாகவே எனது கவலையென கூறி நாட்டை பொறுப்பேற்க சஜித் பிரேமதாச மறுப்பு தெரிவித்தார்.
53 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் தலைவரும் மற்றும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் தலைவரும் நாட்டை பொறுப்பேற்க மறுத்தமையினால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வைத்து இந்த நாட்டை பொறுப்பேற்று மீட்டுகொடுத்த ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
காணி உரிமை
எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டின் தலைவரை தெரிவு செய்யும் பொறுப்பு மக்கள் கையில் உள்ளது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனைவரும் வாக்களிப்பார்கள்.
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் முதல் காணி உரிமை மற்றும் கல்விக்கான அபிவிருத்தி அனைத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தை ஆரம்பிக்க உள்ளோம்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.