19 ஜனாதிபதி வேட்பாளர்கள் இதுவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமது அமைப்பு சிறப்பு ஆய்வொன்றினை நேற்று முதல் தொடங்கியுள்ளதாகவும், சிலர் கட்சி அலுவலகங்கனை கூட அமைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 38 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில் தற்போது பத்து வேட்பாளர்கள் மாத்திரமே தமது கொள்கைகளை முன்வைத்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள்
இதேவேளை, சில வேட்பாளர்களை கண்டுபிடிக்கப்பட முடியவில்லை என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
தற்போது பத்து வேட்பாளர்கள் மட்டுமே பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.