2025 ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் இரண்டு பேர் இறப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை
ஜனவரி 2025 இல் இருந்து அமெரிக்காவில் ஒவ்வொரு ஒன்பது வினாடிக்கும் ஒரு பிறப்பும், ஒவ்வொரு 9.4 வினாடிக்கும் ஒரு இறப்பும் ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து குடியேற்றங்கள் அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு 23.2 நொடிக்கும் அமெரிக்க மக்கள் தொகையில் ஒருவர் கூடுதலாக சேர்வர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.