இலங்கை்கு போதைப்பொருள் கடத்தும் 25 முக்கிய கடத்தல்காரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானியர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலகத்துடன் தொடர்பு
இதேவேளை, இந்தக் கடத்தல்காரர்களில் பலர் பாதாள உலகத்துடன் தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த கடத்தல்காரர்களைப் தொடர்பில் காவல்துறை விசேட கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

