2,500 கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் இந்திய (India) கடற்படையின் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலக நாடுகளின் போர் தாக்குதலில் ஆளில்லா சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், ஆளில்லா சாதனங்களை உருவாக்க இந்திய கடற்படை முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை
அந்தவகையில், ரூ.2,500 கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் இந்திய கடற்படையின் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கப்பலானது Extra large பிரிவில் 100 டன் எடைக்கு மேல் இருக்கும் எனவும் இந்த கப்பலின் மூலம் நீருக்கு அடியில் இருக்கும் எதிரிகளின் கப்பல் மீது தாக்குதல் நடத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், கடலின் மேற்பரப்பில் இருக்கும் கப்பலை அடையாளம் கண்டு தாக்க கூடிய வகையிலும் குறித்த கப்பல் வடிவமைக்கப்பட்டள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.