இலங்கையின் பிரபல டயர் உற்பத்தி நிறுவனம் ஒன்று இலங்கை சுங்க திணைக்களத்திற்கு 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதத்தை செலுத்த தவறியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத் தொகையை செலுத்தாததால், அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்ததாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டயர்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக சுங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியாக ஏறக்குறைய 800 கோடி ரூபாய் விதிக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த தொகை இருபத்தி ஆறு கோடி ரூபாயாக (261,000,000 ரூபாய்) குறைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். .
மார்ச் 18 அன்று விதிக்கப்பட்ட அபராதத்தை கூட நிறுவனம் செலுத்தாமல் தவிர்த்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
174 வருடங்களில் புவியின் வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
டயர் இறக்குமதி இடைநிறுத்தம்
இலங்கைக்கான டயர் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதன் பின்னர் குறித்த நிறுவனம் சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான டயர்களை இலங்கை சுங்க மற்றும் இலங்கை முதலீட்டுச் சபைக்கு தெரிவிக்காமல் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 2021ம் ஆண்டு இந்த நிறுவனம் தனது முழு உற்பத்தியையும் உள்ளூர் சந்தைக்கு திருப்பியதன் மூலம் பெரும் இலாபத்தை ஈட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிறுவனம் தனது தயாரிப்புகளில் 20 சதவீதத்தை மட்டுமே சுங்க வரியாக செலுத்திய பிறகு உள்நாட்டு சந்தையில் வெளியிட சட்டம் அனுமதிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளின் படி, சுங்கத் திணைக்களத்தின் தணிக்கைப் பிரிவு அதிகாரிகள் முறைப்படி ஆய்வு நடத்தியதில், உள்ளூர் சந்தையில் 500 கோடி ரூபாய்க்கு மேல் பொருட்களை விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
ஊழியர் சேமலாப நிதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சித் தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |