🛑 புதிய இணைப்பு
சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டம் நேற்று ஆரம்பமான நிலையில் இன்றும் (10) இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில், போராட்டம் இடம்பெறும் தையிட்டி பகுதியில் அதிக காவல்துறையினர்
குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நீர்த்தாரை பிரயோகத்திற்கான நடவடிக்கையும்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
🛑 முதலாம் இணைப்பு
யாழில் (Jaffna) தையிட்டி விகாரை முன்பு பெருமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
போயா தினமான இன்று (10) சிங்கள மக்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்து இருந்தார்.
இதனடிப்படையில், இன்று (10) நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ் மக்களும் பெருமளவில் கலந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்து இருந்தார்.
காவல்துறையினர்
இருப்பினும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 27 பேருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் நேற்று (09) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நேற்றும் (09) இன்றும் (10) போராட்டம் செய்ய வேண்டாம் என அறிவித்து இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று (10) பாதுகாப்பு சூழலை கருத்திற்கொண்டு காவல்துறையினர் பெருமளவில் குறித்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










