முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லெபனானில் பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்திய பேஜர்கள் வெடித்தது எப்படி..! அதிர்ச்சி தரும் தகவல்

லெபனானில்(lebanon) ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்ததுடன் 3000 பேர் வரை காயமடைந்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 300 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் குறைந்தது 100 மருத்துவமனைகளுக்கு காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்களை எதிர்கொள்ள 1,084 அம்புலன்ஸ்கள் வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக அமைச்சகம் மேலும் தெரிவித்தது.

அடுத்தடுத்து வெடித்த பேஜர்கள்

இதேவேளை லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலரது பொக்கெட்டுகளில் இருந்த கையடக்க பேஜர்கள் முதலில் வெடித்துள்ளன. இதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துள்ளன.

நுட்பமாக வைக்கப்பட்ட வெடிமருந்து

இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பானது ஹிஸ்புல்லா ஓடர் கொடுத்து தாய்வானில் தயாரிக்கப்பட்ட 5,000 பேஜர்களுக்குள் சிறிய அளவிலான வெடிபொருட்களை (3 கிராம்) வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இந்த சதி திட்டம் பல மாதங்களாக தீட்டப்பட்டுள்ளது.

லெபனானில் பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்திய பேஜர்கள் வெடித்தது எப்படி..! அதிர்ச்சி தரும் தகவல் | 3 Grams Of Explosives Per Pager

தாய்வானை தளமாகக் கொண்ட கோல்ட் அப்பல்லோ தயாரித்த 5,000 பேஜர்களை ஹிஸ்புல்லா அமைப்பு ஓடர் செய்துள்ளதாக மூத்த லெபனான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்தது, இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக பல ஆதாரங்கள் கூறுகின்றன.

மேலும் புதிய பேஜர்களில் மூன்று கிராம் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், பல மாதங்களாக ஹிஸ்புல்லாவால் இது கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கான பதிலடியை இஸ்ரேல் உறுதியாக பெறும் என ஹிஸ்புல்லா சூளுரைத்துள்ளது.   

https://www.youtube.com/embed/ygeHO_BfVqI

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.