யாழ்ப்பாணம்(jaffna), செம்மணி மனிதப் புதைகுழியில்(chemmani mass graves) இன்று கைக்குழந்தையின்
எலும்புக்கூடு உட்பட 3 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம்
காணப்பட்டுள்ளன.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப்
புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு இன்று(26) காலை ஆரம்பமானது.
இதுவரை 22 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்
இன்று கைக்குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 3 மனித என்புத் தொகுதிகள் புதிதாக
அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியில் 22 மனித என்புத்
தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
ஆணையாளர் வோல்கர் டர்க் செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட்டிருந்த நிலையில் கைக்குழந்தையின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/rrACHN6LwEs

