மட்டக்களப்பு – ஊறணி பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட
ஒருவரையும், ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவருமாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று (12) இரவு 11 மணியளவில் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருட்கள் மீட்பு
இதன்போது 26 லீற்றர் கோடா
மற்றும் பெருமளவிலான ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரிகளான இருவரையும் மூன்று நாட்கள்
பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை
பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.