தலவாக்கலை பகுதியில் இயங்கும் தமிழ் பாடசாலை ஒன்றில் இன்று (16) தரம் 6 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்ட வாசனை திரவியங்களை நுகர்ந்துள்ளனர்.
இதனால் திடீர் சுகவீனம் அடைந்த மாணவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள்
நச்சுத்தன்மை வாய்ந்த வாசனை திரவியங்களை நுகர்ந்தன் காரணமாக குறித்த மாணவர்களுக்கு தலைசுற்றல், தலைவலி, குமட்டல் வாந்திபேதி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை பிரதேச பிராந்திய வைத்திசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி அசேல மல்லவராச்சி தெரிவித்துள்ளார்.
எனினும் மாணவர்களின் உடல்நிலை மோசமானதாக இல்லை எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை பகுதியில் இயங்கும் குறித்த தமிழ் பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் ஒரு மாணவர் பாடசாலைக்கு கொண்டு வந்து நறுமண போத்தலை ஏனைய மாணவர்களுக்கும் நுகர்ந்ததால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.