நாட்டில் 30,000 மெற்றிக் டன் உப்பை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் நந்தன திலக(T. Nandana Thilaka) தெரிவித்துள்ளார்.
தற்போது, உப்புக்கான பற்றாக்குறை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்குத் தீர்வாக, குறித்த தொகை உப்பு இறக்குமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேவையற்ற வகையில் உப்பைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு, நந்தன திலக பொதுமக்களைக் கோரியுள்ளார்.
உப்பு கையிருப்பு
பொறுப்புகளை ஏற்றதன் பின்னர் நேற்றைய தினம்(28) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன், ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்திடம் 6,000 மெற்றிக் டன் உப்பு கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த உப்பு கையிருப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் வரை போதுமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.