Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் நாடாளுமன்றத்துக்கு புதிதாக தெரிவான 35 உறுப்பினர்கள், மாதிவெல வீடமைப்பு வளாகத்தில் வீட்டு வசதிகளை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவுக்கு வெளியே வசிப்பவர்களுக்கே இந்த வளாகத்தில் வீட்டு வசதிகள் வழங்கப்படுகின்றன.
கொள்கைத் தீர்மானம்
இதன்படி, இந்த வளாகத்தில், 110 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடு வழங்குவதற்கான வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வீண் விரயங்களை தவிர்க்கும் வகையில் அமைச்சர்களுக்கு எரிபொருள் சேமிப்பு வாகனங்களே வழங்கப்படும் என்று ஏற்கனவே அரசாங்கம் கொள்கைத் தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.