இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் நடந்த வேலைநிறுத்தங்கள் காரணமாக 300 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்தக் காலகட்டத்தில் 386 வேலைநிறுத்தங்கள் நடந்ததாகவும், அந்த வேலைநிறுத்தங்களால் நாடு 662,388 வேலை நாட்களை இழந்ததாகவும் அவர் கூறினார்.
அதிக எண்ணிக்கையிலான வேலைநிறுத்தங்கள்
வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து பதினைந்தாயிரத்து முந்நூற்று ஐம்பத்தாறு என்றும், 2018 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்ததாகவும் வசந்த அதுகோரல தெரிவித்தார்.

அந்த ஆண்டு நடந்த வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கை 51 என்று அவர் கூறினார்.
கல்வி, சுகாதாரம், தோட்டங்கள், போக்குவரத்து மற்றும் ஆடை போன்ற துறைகளில் அதிக எண்ணிக்கையிலான வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் தற்போது செயல்படும் தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை 2122 ஆகும்.

