மாணவர் ஒருவரின் தற்கொலை தொடர்பான காவல்துறை விசாரணைகளின் அடிப்படையில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின்(university of sabaragamuwa) தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள், இன்று (4) கைது செய்யப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய விசாரணைகள் தொடர்பாக இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட விசாரணை
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிய மாணவர் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக கடந்த 29 ஆம் திகதி சமனலவேவ காவல் நிலையத்திற்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து, சப்ரகமுவ பல்கலைக்கழக த்தைச் சேர்ந்த புதிய மாணவர்களில் துன்புறுத்தலுக்கு ஆளான 20 பேரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற சமனலவேவ காவல் நிலையம் 2 ஆம் திகதி நடவடிக்கை எடுத்தது.

