400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில் கிரியைகள் இன்று (27) ஆரம்பமானது.
அந்தவகையில், துணைவி பிரகேதீஷ்வரர் ஆதிசிவனுக்கு 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம்
நடைபெற உள்ளது.
மிகத் தொன்மையான வழிப்பாட்டு
மிகத் தொன்மையான வழிப்பாட்டுத் தலமான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள் உருவாக்கம் செய்வதற்குரிய பணிகள் யாழ்ப்பாணம் மரவுரிமை அமையத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டடது.

குறித்த பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தினை அடைந்து இருக்கும் நிலையில் மிக விரைவில் கும்பாபிஷேகம் நடாத்தி மக்களின் வழிபாட்டுத் தலாமாக்கப்படவுள்ளது.
குறித்த ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்ட்டை செய்தல், எண்ணைக் காப்பு சாத்தல், கும்பாபிஷேகம் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.




