சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த
சில நாட்களாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் பரிசோதனை
மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று(24) சுழிபுரம் பிரிவு பொது சுகாதார பரிசோதகர்
தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையினை
மேற்கொண்டனர்.
விடுதி அறையிலிருந்து இளம் ஆசிரியையின் சடலம் மீட்பு
நீதிமன்றில் வழக்குகள் தாக்கல்
இதன்போது திகதி காலாவதியான உணவு பொருட்கள், பழுதடைந்த உணவு
பொருட்கள், உரிய சுகாதார நடை முறைகளை பின்பற்றாத பலசரக்கு விற்பனை நிலையம்
சிக்கிக்கொண்டது.
மேற்படி பலசரக்கு கடை உரிமையாளருக்கு எதிராக சுழிபுரம் பொது சுகாதார
பரிசோதகரினால் இன்றையதினம்(25)மல்லாகம் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல்
செய்யப்பட்டன.
ராஜபக்சாக்களுக்கு ஏற்பட்ட பேரிடி : மில்லியன் கணக்கில் இழப்பீடு கோரும் வர்த்தகர்
தண்டம் விதிப்பு
இதனையடுத்து இன்றையதினமே வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்ட
நீதிமன்றம்,பலசரக்கு கடை உரிமையாளருக்கு 40000 ரூபாய் தண்டம் விதித்ததுடன் கடுமையான
எச்சரிக்கையும் விடுத்தது.
அத்துடன் கைப்பற்றப்பட்ட பொருட்கள் நீதிமன்ற
உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் அரிசி : கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |