ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு (PMD) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய 03 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பதில் அமைச்சர்கள் நியமனம்
விஜித ஹேரத்தின் (Vijitha Herath) கீழ் காணப்படும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் அனில் ஜயந்த பெர்னாண்டோவின் (Anil Jayanta Fernando) கீழ் காணப்படும் தொழில் அமைச்சு ஆகியவற்றுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, பதில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன (Eranga Weeraratne), பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர (Aruna Jayasekara), நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பதில் அமைச்சராக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர (Arun Hemachandra), பதில் தொழில் அமைச்சராக, பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.