இலங்கையில் செயற்படும் 59 தொழிற்சங்கங்களின் பதிவுகள் அண்மைக்காலத்தில் ரத்துச் செய்யப்பபட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொழில் திணைக்களத்தின் சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த தொழிற்சங்கங்களின் பதிவு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செயற்படும் தொழிற்சங்கங்கள்
இலங்கையில் தற்போதைக்கு 2122 தொழிற்சங்கங்கள் செயற்படுகின்றன. அவற்றில் 128 தொழிற்சங்கங்கள் கடந்த 2023ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உத்தியோகபூர்வ தொழிற்சங்க அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள தொழிற்சங்கள் தொழில் திணைக்களத்தில் பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.
பதிவுகளை ரத்துச் செய்யும் அதிகாரம்
எனினும் தொழில் திணைக்களத்தின் வழிகாட்டல்கள், விதிமுறைகளை மீறிச் செயற்படும் தொழிற்சங்கங்களின் பதிவுகளை ரத்துச் செய்யும் அதிகாரம் தொழில் திணைக்களத்துக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.