பிஜி தீவில் (Fiji Islands) 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (14) அதிகாலை 1.32 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு 174 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம்
அத்துடன் நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று (13) மியன்மார் (Myanmar) மற்றும் தஜிகிஸ்தானில் (Tajikistan) மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.