இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 679 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலத்தில் இராணுவத்தில் இருந்து தப்பியோடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
பொலிஸாரால் கைது
இந்நிலையில் கடந்த ஜனவரி தொடக்கம் இராணுவத்தில் தப்பியோடுகின்றவர்களை தேடிக் கைது செய்யும் நடவடிக்கையொன்றை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 01ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதிக்குள் 679 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.