இன்றைய இரவு வானில் அரிய நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாக நவீன தொழில்நுட்பம் தொடர்பான கொழும்பு, பல்கலைக்கழகத்தின் விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன(Chandana Jayaratne) தெரிவித்துள்ளார்.
அதன்படி, சூரிய மண்டலத்தைச் சேர்ந்த 7 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தென்படும் அரிய நிகழ்வொன்றே நிகழவுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன கூறியுள்ளார்.
குறித்த அரிய நிகழ்வானது இன்று(25) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சூரியன் மறைந்த பின்னர் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வான் பரப்பு
அத்துடன், இந்தக் காட்சி இலங்கைக்கும் மிகத் தெளிவாகத் தெரியும் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், பூமியைத் தவிர, சூரிய மண்டலத்தைச் சேர்ந்த அனைத்து கிரகங்களையும் ஒரே பாதையில் காண முடியும் என்றும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.