முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிண்ணியாவில் உளநல சிகிச்சைக்காக புதிய பிரிவு திறந்து வைப்பு

கிண்ணியா தள வைத்தியசாலையில் உளநல சிகிச்சைக்காக, ‘ரம்மிய இல்லம்’ என்ற
பெயரில் பிரிவு ஒன்று இன்று (26) புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவு, வைத்தியசாலையின், வைத்திய அத்தியேட்சகர் D. H. நயன
சந்திரதாசவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கருத்து தெரிவித்த கிண்ணியா தள
வைத்தியசாலையின் உளநல ஆரோக்கிய வைத்திய அதிகாரி
ஏ. கே. எம். நஸ்மி  குறித்த பிரதேசத்தில், 2024 ஆம் ஆண்டு, தங்களை தாங்களே பல முறைகளில்,
துன்புறுத்தி தவறான முடிவு எடுக்க முயற்சித்த 71 பேர், வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறார்கள்.

போதை பொருள் பாவனை, இளம் வயது திருமணத்தில் பின்னர்
ஏற்படுகின்ற பிரச்சினைகள், சமூக ஊடகங்களின் தாக்கங்கள் இவர்களை இந்த
நிலைமைக்கு ஆளாக்கிருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

சிகிச்சை

கிண்ணியா பிரதேசத்தைப் பொறுத்தவரை, 2021 ஆண்டை விட, 2024 ஆண்டு உளநல சேவையை பெற எமது பிரிவுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது ஒரு முக்கியமான அம்சமாகும்.

2021 ஆண்டு 40 பேர் இங்கு சிகிச்சை பெற வந்தனர். 2024 ஆண்டு, 130 க்கும்
மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றிருக்கின்றனர்.

விஞ்ஞான ரீதியாக
சிகிச்சை அளித்து, உளநலம் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க முடியும் என்ற
நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

கிண்ணியாவில் உளநல சிகிச்சைக்காக புதிய பிரிவு திறந்து வைப்பு | 71 People Suicide In 2024 In Kinniya

இந்த
விடயம் ஒரு மகிழ்ச்சிகரமான விடயமாகும்.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெறுவதற்காகவே அந்த
பிரிவை தற்போது நாங்கள் ரம்மிய இல்லமென மாற்றியிருக்கிறோம்.

எனவே, இவ்வாறான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே அவதானித்து,
இங்கு கொண்டு வந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களை, குணமாக்க முடியும்
என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதோடு, பாடசாலைகளும் இதனை
அறிந்திருப்பது அவசியமாகும் என்றும் அவர், மேலும் தெரிவித்தார். 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.