பதுளையில் ஆண் ஒருவரும் யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகன திணைக்களத்தின் முத்திரைகள் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை ஒட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட போலி ஸ்டிக்கர்கள் மற்றும் போலி ஆவணங்களுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
43 வயதுடைய சந்தேகநபரும் 22 வயதுடைய யுவதி ஒருவரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழில் 16 இலட்சம் ரூபாய்க்கு விற்பனையான சேலை
கணவன் – மனைவி
பதுளை, கனுபலெல்ல, தலதாஎல வீதியில் இருவரும் கணவன் மனைவி போல் நடித்து வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளனர்.
அங்கிருந்து போலியான உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் போலி ஆவணங்களை பயன்படுத்தி போலியான ஆவணங்களை பணத்திற்கு வழங்கியதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிபர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தற்காலிக ஓட்டுநர் உரிமம் மற்றும் வங்கிக் கடன்களைப் பெறுவதற்கு இந்த ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |