அமெரிக்காவின் (America) அலாஸ்கா பிராந்தியத்தில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஃபேர்பேங்க்ஸ் (Fairbanks) விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய டக்ளஸ் சி-54 ஸ்கைமாஸ்டர் (Douglas C-54 Skymaster) எனும் விமானம், பயணத்தை ஆரம்பித்து சுமார் 11 கிலோ மீற்றர் தூரம் வரை சென்ற நிலையில் அலாஸ்காவில் Tanana நதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவேன்: நாடாளுமன்றத்தில் சஜித் திட்டவட்டம்
விபத்து சம்பவம்
இதனையடுத்து, நதியின் கரையில் ஒரு செங்குத்தான மலையில் விமானம் சரிந்து தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் இருவர் பலியானதாகவும் உயிர் பிழைத்தவர்கள் யாரும் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையின் அலாஸ்கா பிராந்திய அலுவலகத்தின் தலைவரான கிளின்ட் ஜான்சன் கூறுகையில்,
”விமானம் புறப்பட்டு விபத்திற்குள்ளான நேரத்தில் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் டவர் operator ஒரு பாரிய புகை மண்டலத்தைக் கண்டார்” என கூறியுள்ளார்.
பால் மா விலைகள் தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு
அமெரிக்கா தடைசெய்யத் திட்டமிட்டு வருகின்ற இஸ்ரேலின் ஒரு கொடூரமான பட்டாலியன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |