முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்ப் – கென்னடி மையத்துக்கு எதிராக வழக்கு தாக்கல்

அமெரிக்காவின் புகழ்பெற்ற கலை மையமான ‘ஜோன் எஃப். கென்னடி கலை மையத்தின்’
(Kennedy Center) பெயரை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பெயருடன் இணைத்து
மாற்றியமைத்ததற்கு எதிராக ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோய்ஸ் பீட்டி (Joyce
Beatty) நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கடந்த வாரம், ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட ஆதரவாளர்களைக் கொண்ட கென்னடி
மையத்தின் நிர்வாகக் குழு, இந்த மையத்தை “ட்ரம்ப்-கென்னடி மையம்” எனப் பெயர்
மாற்றம் செய்ய வாக்களித்தது.

மையத்தின் பெயரை மாற்றுவதற்கு “அமெரிக்க நாடாளுமன்றத்தின் (Congress)
ஒப்புதல்” அவசியம் என்றும், நிர்வாகக் குழு தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவு
சட்டவிரோதமானது என்றும் ஜோய்ஸ் பீட்டி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

‘மியூட்’ (Muted) 

இந்தப் பெயர் மாற்றக் கூட்டம் நடைபெற்ற போது, தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய
முயன்றபோது தன்னை ‘மியூட்’ (Muted) செய்து பேசவிடாமல் தடுத்ததாக அவர் குற்றம்
சாட்டியுள்ளார்.

ட்ரம்ப் - கென்னடி மையத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் | Trump Files Lawsuit Against Kennedy Center

“அமெரிக்கக் குடியரசு மாண்புக்கு மாறாக, அதிகாரத்துவ ஆட்சியைப் பிரதிபலிக்கும்
வகையில், அமர்ந்து கொண்டிருக்கும் ஜனாதிபதி பெயரையே ஒரு வரலாற்றுச்
சிறப்புமிக்க மையத்திற்குச் சூட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது” என அவர்
தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் லிஸ் ஹஸ்டன்
கூறுகையில், “ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த மையத்தின் நிதி நிலையைச்
சீரமைத்து, கட்டிடத்தைப் புதுப்பித்து, சிதைந்து போயிருந்த இந்த மையத்தை
மீட்டெடுத்துள்ளார்.

அதன் காரணமாகவே நிர்வாகக் குழு ஒருமனதாக இந்தப் பெயரைச் சூட்டியது,” என்றார்.

தற்போது இந்த மையத்தின் முகப்பில் “The Donald J. Trump and The John F.
Kennedy Memorial Center for the Performing Arts” என்ற பெயர் பலகை
பொருத்தப்பட்டுள்ளது.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடியின் குடும்ப உறுப்பினர்கள்
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“கென்னடி மையம் என்பது மறைந்த ஒரு ஜனாதிபதிக்கான நினைவுச் சின்னம். லிங்கன்
நினைவுச் சின்னத்தின் பெயரை யாராலும் மாற்ற முடியாதது போல, இதையும் மாற்ற
முடியாது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.