நேபாளம் சென்ற மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் உடமைகள் கப் ரக வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட காணொளி வெளியாகியதில் விவாதம் எழுந்துள்ளது.
ரோஸ்டன் சேஸ் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கலந்துகொள்ளும் ஐந்து போட்டிகள் கொண்ட ரி20 தொடர் நாளை(27) கிர்திபூரில் நடைபெறவுள்ளது.
இதற்காக மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் நேபாள தலைநகர் காத்மாண்டு விமான நிலையம் சென்றுள்ளனர்.
ஈரான் இந்தியா சட்டவிரோத வர்த்தகம்: அமெரிக்காவின் அதிரடி முடிவு
சாதாரண கப்ரக வாகனத்தில் வீரர்களின் உடைமைகள்
வழக்கமாக ஒரு நாட்டுக்கு மற்றொரு நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் வரும்போது சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன், அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்துகொடுக்கப்படும்.
இந்நிலையில்,நேபாளம் வந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் உடைமைகள் சாதாரண கப்ரக வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது.
நேபாள சீனியர் ஆண்கள் அணிக்கு எதிராக அந்நாட்டில் நடைபெறும் சர்வதேச தொடர் இது என்பதோடு, வரலாற்றில் முதல்முறையாக மேற்கிந்திய தீவுகள் அணி முதல்முறையாக நேபாளம் சென்றுள்ளது.
17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தங்கங்கள்: தம்பதியினருக்கு அடித்த அதிஷ்டம்
கிளம்பிய விவாதம்
இந்நிலையில் வீரர்களின் உடமைகள் கப்ரக வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியதால் மக்கள் மத்தியில் விவாதமாக மாறியுள்ளது.
The way Nepal welcomed West Indies team. 🤨 pic.twitter.com/8JBKNOu01T
— Nibraz Ramzan (@nibraz88cricket) April 24, 2024
இதனையடுத்து ஒரு தரப்பினர், நேபாளத்தின் வரவேற்பை விமர்சித்து வருகின்றதுடன் மற்றொரு தரப்பினரோ, டெம்போவில் சாமான்களை ஏற்றிச் சென்றதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பி நேபாளத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கனடாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தொழில்நுட்பம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |