Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியாவின் முழுச்செலவில் புனரமைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இலங்கையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 16 ஏக்கர் பரப்பைக் கொண்ட காங்கேசன்துறை துறைமுகம், இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திலிருந்து 104 கிலோ மீற்றர் (56 கடல் மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
61.5 மில்லியன் டொலர்கள் செலவு
தற்போது தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு சேவையில் ஈடுபடும் பயணிகள் கப்பல் சேவை சுமார் 3.5 மணி நேரத்தில் 111 கிலோமீற்றர்(60 கடல் மைல்) கடக்கிறது.
இந்தநிலையில் காங்கேசன்துறை துறைமுக புனரமைப்புத் திட்டத்தின் முழுச் செலவு 61.5 மில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா தனது முழுச்செலவில் புனரமைக்கவுள்ளது.
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு
உழைப்பாளர்களுக்கு விடுமுறை வழங்குங்கள் : வவுனியா வர்த்தக சங்கம் கோரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |