கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான வினாத்தாள் விநியோகம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், மழையினால் ஏற்படும் அவசர நிலைமைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழை பெய்து வருவதால் மாணவர்கள் தேர்வு மத்திய நிலையத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டால், 117 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
கணவனை காப்பாற்ற மனைவி செய்த துணிச்சலான செயல்! இறுதியில் நேர்ந்த விபரீதம்
பரீட்சைக்கான ஏற்பாடுகள்
இந்த வருடம் 459,979 பரீட்சார்த்திகள் பொதுப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். 3527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.
நேற்று நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் பொதுப் பரீட்சை தொடர்பான பயிற்றுவிப்பு வகுப்புகள் உட்பட அனைத்து பயிலரங்குகளும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
மின் கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இதற்கு எதிராக எவரேனும் அல்லது நிறுவனமோ செயற்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |