நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை அதே இடங்களில் மீண்டும் திறப்பது ஆபத்தானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அத்தகைய பாடசாலைகளை பொருத்தமான இடத்திற்கு மாற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய யுனிசெஃப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீட்டெடுப்பது தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் யுனிசெஃப் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே நேற்று முன்தினம் பிரதமர் அலுவலகத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.
மண்சரிவு அபாயம்
அங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதற்கிடையில், கண்டி மகாமாயா பாலிகா வித்தியாலயத்திற்கு மேலே உள்ள மண் மேடு மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் கண்டி மாவட்ட அதிகாரிகள் நேற்று (21) அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
இது நிலச்சரிவு அல்ல, ஒரு அடுக்கு மண் சரிவு என்று முடிவு செய்யப்பட்டது.

