அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல் ஜனவரி 4, 2026 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலைகளுக்கும் 2026 கல்வியாண்டின் முதல் தவணையின் முதல் கட்டத்தை ஜனவரி 05, 2026 திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2026 கல்வியாண்டின் முதல் தவணை 2025.12.09 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி செயல்படும்.
மேலும், 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகள் 2025.09.11 திகதியிட்ட 30/2025 சுற்றறிக்கையின்படி செயல்படும்.
பரீட்சை திகதிகள்
இதேவேளை, பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்ட பாடசாலை பரீட்சை திகதிகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு நேற்று (22) முடிவடைந்தது.மேலும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025 டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை முடிவடைய உள்ளது.
அத்துடன், 2025.12.27 முதல் 2026.01.04 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்க விடுமுறைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

