வெளியாகிய 2023ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சுழிபுரம் விக்டோரியா
கல்லூரியானது வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்தவகையில்,
வணிகப் பிரிவில் முகுந்தினி பிரான்ஸிஸ் தேவநாயகம் 3ஏ சித்திகளைப் பெற்று
மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். கீர்த்தனா ஜெயரட்ணம் 3ஏ
சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 11ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்
மருத்துவ பீடம்
அத்துடன் உயிரியல் விஞ்ஞான பிரிவில் ஜக்சயன் யோகநாதன் 3ஏ சித்திகளையும்,
லக்சிகா அம்பலவாணர் 3ஏ சித்திகளையும், செல்வன் மிதுனன் 2ஏ பி சித்திகளையும்
பெற்று மூவரும் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இந்நிலையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பெற்றோருக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்த குறித்த மாணவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
யாழ்ப்பாணக் கல்லூரி
மேலும் யாழ்ப்பாணக் கல்லூரியின் பௌதீக விஞ்ஞான பிரிவில் பி.சத்யகரன் 3ஏ, பி.பிரவீன் 3ஏ, ரி.பிரியந்தி 3ஏ, எஸ்.பிரஷ்ஸன் 2ஏ பி சித்திகளைப் பெற்றுள்ளனர்.
உயிரியல் விஞ்ஞான பிரிவில்
யு.கிருஷிகா 2ஏ பி, என்.டினுசன் பி 2சி, ஜி.பிரியங்கி 2பி சி, வீ.மேனகன் ஏ 2சி சித்திகளையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வணிகப் பிரிவில்
எஸ்.சாரங்கன் 3ஏ, ஆர்.தட்ஷனா 2பி சி, வி.திலக்சிகா பி 2சியையும் கலைப்பிரிவில்
ரி.வினோத் ஏ 2பி, எஸ்.லிவிதன் 2ஏ பியையும் பெற்றுள்ளனர்.
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற நிகழ்வுகள்
தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சி: கல்வி அமைச்சர் அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |