முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியா – புதுடெல்லியில் கல்விக்கான சர்வதேச மாநாடு: இலங்கை கல்விமான்கள்

இந்தியாவில் (India) இடம்பெறும் தரமான கல்விக்கான சர்வதேச மாநாட்டில் இலங்கை கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர் இணைந்துள்ளனர்.

இந்திய தலைநகரான புதுடெல்லியில் (New Delhi) இம்மாதம் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை “தரமான கல்விக்கான சர்வதேச மாநாடு – 2024“ இடம்பெறுகின்றது.

புதுடெல்லியில் இயங்கிவரும் டொக்டர் கலாம் சர்வதேச ஒன்றியம், தரமான கல்விக்கான சர்வதேச அமைப்பு மற்றும் தெற்காசிய சர்வதேச அமைப்பு என்பன இணைந்து இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளன.

அதி அபாய பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட பாடசாலைகள்...! வெளியான தகவல்

அதி அபாய பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட பாடசாலைகள்…! வெளியான தகவல்

25 துறை சார் நிபுணர்கள்

இந்த மாநாட்டில் இலங்கையிலிருந்து கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார் (A. Aravind Kumar) தலைமையில் 25 துறை சார் நிபுணர்கள் பங்கெடுத்துள்ளனர்.

உலகலாவிய நவீன கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை எவ்வாறு மேம்படுத்துதல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விஷேட புதிய கல்வித்திட்டம் மற்றும் திறன் சார்ந்த கல்வித் திட்டத்தின் தொலை நோக்கு என்பனவற்றுடன் பிரதான தலைப்புக்களில் இந்த மாநாட்டின் அமர்வுகள் இடம்பெற்றன.

இந்தியா - புதுடெல்லியில் கல்விக்கான சர்வதேச மாநாடு: இலங்கை கல்விமான்கள் | International Conference On Quality Education Sl

தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் எம்.உதயகுமாரன், மேல் மாகாண முன்பள்ளி பாடசாலை பணிப்பாளர் மற்றும் முக்கிய பிரதி நிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இருநாள் கண்காட்சியும் மற்றைய இரு தினங்கள் முக்கிய தலைப்புக்களில் கலந்துரையாடல்களாகவும் இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதுடன் பிரதம அதிதியின் உரையினை இலங்கை கல்வி ராஜாங்க அமைச்சர் நிகழ்த்தியுள்ளார்.

இலங்கையர்களுக்கு விசேட விசா சலுகை வழங்கும் நாடு: வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையர்களுக்கு விசேட விசா சலுகை வழங்கும் நாடு: வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையிலும் நடைமுறைப்படுத்தல்

இதேபோன்று சிறப்பு சொற்பொழிவினை இலங்கை அமேசன் கல்வி நிலையம் மற்றும் அமேசன் பல்கலைக்கழகத்தின் நிர்வாக பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் நிகழ்த்தியிருந்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் புதுடெல்லியில் உள்ள முன்மாதிரி பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளை கண்டறியும் வகையில் கல்வி கள சுற்றாலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியா - புதுடெல்லியில் கல்விக்கான சர்வதேச மாநாடு: இலங்கை கல்விமான்கள் | International Conference On Quality Education Sl

இந்த சுற்றுலாவின் நோக்கமானது, முன்மாதிரி பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளை கண்டறிந்து அதனை திட்டமாக வகுத்து இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளமை ஆகும்.

இதேவேளை இன்று (30) தரமான கல்விக்கான சர்வதேச மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை : முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்

தொடரும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை : முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.