முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக மோடி பதவிப் பிரமாணம்!

இந்திய பிரதமராக மூன்றாவது முறையாகவும்  நரேந்திர மோடி (Narendra Modi) பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று (09.6.2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, புதிய பிரதமருக்கு பதவிப்பிரமாணமும் இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்துள்ளார்.

3 ஆவது முறையாக பிரதமராக மோடி இன்று பதவியேற்பு

3 ஆவது முறையாக பிரதமராக மோடி இன்று பதவியேற்பு

பா.ஜகவுக்கு வெற்றி

கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆண்டு வந்த பா.ஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 543 தொகுதிகளில் 240 இடங்களையே அந்த கட்சி பெற்றது.

மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக மோடி பதவிப் பிரமாணம்! | Modi Became The Prime Minister For The Third Time

அதேநேரம் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. அத்துடன் புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் அந்த கூட்டணி தொடங்கியது.

பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்க இந்த கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அத்துடன் கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியை அந்த கட்சிகள் தேர்வு செய்தன.

சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை: மோடியை சாடிய ராகுல் காந்தி

சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை: மோடியை சாடிய ராகுல் காந்தி

மோடி தெரிவு

 அத்துடன் கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியை அந்த கட்சிகள் தேர்வு செய்தன. இதைத்தொடர்ந்து பா.ஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.இதில் கூட்டணியின் நாடாளுமன்றக்குழு தலைவராக (பிரதமர்) மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக மோடி பதவிப் பிரமாணம்! | Modi Became The Prime Minister For The Third Time

பின்னர் பா.ஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதிநிதிகள் குழுவினர் அதிபர்  மாளிகைக்கு சென்று அதிபர் திரௌபதி முர்முவை சந்தித்து மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான கடிதத்தை வழங்கினர்.

மேலும் பிரதமர் மோடியை ஆதரிக்கும் எம்.பி.க்களின் கையெழுத்து போட்ட கடிதங்களையும், அதிபரிடம் அவர்கள் அளித்தனர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி மாலையில் அதிபர் மாளிகைக்கு சென்று முர்முவை சந்தித்தார். அத்துடன் ஆட்சியமைப்பதற்கான உரிமையும் கோரினார்.

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்தியா விரையும் சர்வதேச தலைவர்கள்

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்தியா விரையும் சர்வதேச தலைவர்கள்

நரேந்திர மோடி பதவியேற்பு

இதை ஏற்று பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு அதிபர் அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் அதிபர் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்பு விழாவில் அதிபர்  ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல்வேறு அண்டை நாட்டு தலைவர்கள் மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரதமர் மோடியை வாழ்த்தினர்.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு அதிபர் மாளிகை மற்றும் சுற்று வட்டாரங்களில்  பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்க தமிழக பெண்ணுக்கு வாய்ப்பு

மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்க தமிழக பெண்ணுக்கு வாய்ப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.