இந்தியாவில் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார் மோடி(narendra modi).
இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 292 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது.இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.
ஆட்சியமைக்க உரிமைகோர
இந்த நிலையில் பா.ஜ.க. தலைமையில் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியினர் இன்று மாலை அதிபர் திரவுபதி முர்மு(Droupadi Murmu)வை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோர உள்ளனர்.
ஜனநாயக தேர்தல் திருவிழா : இந்தியாவை பாராட்டும் அமெரிக்கா
பதவியேற்பு விழா
இதனையடுத்து, வரும் 8ம் திகதி மாலை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை மோடி, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் அதிபர் திரௌபதி முர்முவை சந்தித்து தனதும் தனது அமைச்சரவையினதும் பதவி விலகலை சமர்ப்பித்தார். அப்போது அவர் பதவியேற்பு வரை பதவியில் நீடிக்குமாறு அதிபரால் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
நரேந்திர மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை நாடாளுமன்றம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |