இலங்கை இளைஞர் சமூகத்துக்காக பொதுக் கற்றலுக்கான கல்வித் தளமான
http://www.publiclearn.lk இனை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ( Ranil Wickremesinghe) தலைமையில்
நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
பொதுக் கற்றல் (Public Learn) என்பது உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இருந்து இலவச
பாடநெறிகளை, பயனர்களை வழிநடத்தும் ஒரு தளமாகும்.
கல்வித்துறையில் உள்ள குறைபாடுகள்
இந்த தளமானது ரீஜண்ட் குளோபல்
நிறுவனத்தால் இயக்கப்படுவதோடு இலங்கையில் இதனை அறிமுகப்படுத்த இங்கிலாந்தில்
உள்ள புலம்பெயர் இலங்கையர்களால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, “இன்று நாம் அறிவு
நிறைந்த சமூகத்தில் வாழ்கிறோம். அந்தச் சமூகத்தில் போட்டித்தன்மையுடன்
முன்னேறுவது அவசியம். கல்வியில் நாம் முன்னணி நாடாக இருப்பதால் இது கடினமான
காரியம் அல்ல என்று நான் நம்புகிறேன்.
தற்போது கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு
வருகிறோம். இந்தப் புதிய திட்டம் அதற்கு நல்ல பங்களிப்பை வழங்கும்.
கற்றல் வாய்ப்புகள்
எதிர்காலத்தில் வகுப்பறைகள் மற்றும் சுவர்கள் இன்றி பாடசாலைக்கு வெளியிலான
கற்றல் வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அவ்வறான திட்டமே
இன்று தொடங்குகிறது.
வகுப்பறைகளில் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் பற்றாக்குறை
சவாலை சமாளிக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்த வேலைத்திட்டம் இலங்கை மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கும், நாட்டில்
டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் எனக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பாக
இருக்கும்.
மேலும், 21ஆம் நூற்றாண்டின் பொருளாதாரம் என்ன என்பதை நாடாளுமன்றத்தில் உள்ள சிலர்
புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கும் சில
வகுப்புகளை நடத்தலாம்” என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.