முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை அரசாங்கத்தை விமர்சித்த அமெரிக்க தூதுவர்

Courtesy: Sivaa Mayuri

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) இலங்கை அரசாங்கத்தின் திறமையின்மையை விமர்சித்துள்ளார்.

கடந்த 7ஆம் திகதியன்று, நியூயோர்க்கின் (New York) காசில்டன் கோர்னர்ஸில் உள்ள ஸ்டேட்டன் தீவு இந்துக் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட வேளை தீவில் உள்ள தமிழ் அமெரிக்க சமூகத்தைச் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்ட போதே தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம்

இந்த சந்திப்பில் இலங்கையில் ஜனநாயகம், பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் சீர்திருத்தத்தை மேம்படுத்துவதற்கான தனது முயற்சிகளை மையமாகக் கொண்டு ஜூலி சங் உரை நிகழ்த்தினார்.

/us-ambassador-criticized-sri-lankan-governmen

அத்துடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கிற்கு தாம் மேற்கொண்ட பல விஜயங்களை அவர் எடுத்துரைத்தார்.

குறிப்பாக மே 18 அன்று யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட தமது அண்மைய விஜயத்தையும் அவர் நினைவூட்டினார்.

தமது விஜயங்களின் போது, முன்னாள் போர் வலயங்களில் குறிப்பிடத்தக்க இராணுவ பிரசன்னம், பயங்கரவாதத் தடைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் ஆகியவற்றை தாம் அவதானித்ததாக குறிப்பிட்ட சங் காணாமல் போனோர் அலுவலகத்தின் திறமையின்மையையும் அவர் விமர்சித்தார்.

தன்னார்வலர்களை அனுப்புதல்

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மையத்தை நிறுவுதல், மத்திய கிழக்கில் ஒரு புதிய மையத்திற்கான திட்டங்கள் உட்பட பல்வேறு முயற்சிகள் குறித்தும் சங் அங்கு விவாதித்தார்.

/us-ambassador-criticized-sri-lankan-governmen

விரைவில் யாழ்ப்பாணத்தில் ஆங்கிலம் கற்பிக்க தன்னார்வலர்களை அமெரிக்கா அனுப்பும் என்றும் ஜூலி சங் தெரிவித்தார்.

மேலும், வலுவான ஜனநாயகத்தை பேணுதல், கடல் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் என்ற மூன்று முக்கிய மூலோபாய நலன்களையே அமெரிக்கா இலங்கையில் விரும்புகிறது என்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.