முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

அவுஸ்திரேலிய(Australia) அணிக்கு எதிரான போட்டியில் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய(India) அணி வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி யானத மேற்கிந்திய தீவுகள்(WI) மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றது.

இதற்கமைய, இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் நேற்றைய தினம்(24) மோதின.

இந்திய அணி 

நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற
அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

imd vs aus rohith batting

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா (Rohith sharma) – விராட் கோலி(Virat Kholi)ஆகியோர் களமிறங்கிய நிலையில், விராட் கோலி ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

எனினும் ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டம் அதிக ஓட்டங்களை குவிக்க உதவியது.

மேலும், 19 பந்துகளில் அரை சதம் அடித்து நடப்பு ரி20 தொடரில் அதிவேக அரை சதம் அடித்த வீரர், சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் மற்றும் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தா ர்.

ரிஷப் பண்ட் (pant)15 ஓட்டங்களில், ஆட்டமிழக்க 92 ஓட்டங்களில் ரோகித் சர்மாவும் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து ஷிவம் துபே(Shivam Dube) மற்றும் சூர்யகுமார்(Suryakumar Yadav) அதிரடி ஆடினார்கள்.

31 ஓட்டங்களில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்க 28 ஓட்டங்களில் துபேவும் ஆட்டமிழந்தார்.

இறுதியில் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தினால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலிய அணி 

அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

india won by 27 runs

இதனை தொடர்ந்து 206 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி சார்பில் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர்.

ஆரம்பத்திலேயே டேவிட் வார்னர் 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்க டிராவிஸ் ஹெட் மிட்செல் மார்ஸ் இருவரும் அதிரடியாக விளையாடினர்.

எனினும், 37 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அதனை தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஹெட்டும் 76 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய மேத்யூ வேட் 1 ஓட்டமும், அவரைத்தொடர்ந்து டிம் டேவில் 15 ஓட்டகளும் பேட் கம்மின்ஸ் 11 ஓட்டகளும் , மிட்செல் ஸ்டார்க் 4 ஓட்டகளும் மட்டுமே எடுத்தனர்.

இறுதியில் அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் அவுஸ்திரேலியா அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.