கடந்த அரசாங்கத்தை போன்று தற்போதுள்ள அரசாங்கமும் ஊழல் செய்வதில் சளைத்தவர்கள்
அல்ல என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில்(Jaffna) இன்று(26) இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சம்பள முரண்பாடுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தம்மால் உருவாக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டம்
வடக்கு மாகாணத்தில் வெற்றி அளித்துள்ளது என்றும் இதன் ஊடாக அதிபர்
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.
அத்துடன், சுபோதினி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை
நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும், நீண்ட காலமாக அதிபர் ஆசிரியர் இடையே இருக்கின்ற சம்பள முரண்பாடுகளை தீர்த்து அதன் ஊடாக
மாணவர்களின் கல்வியை மேம்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும்.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாவிடத்து
இவ்வாறான தொழிற்சங்க போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்” என இலங்கை
ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.