முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயர்தர பரீட்சை பொருளியல் வினாத்தாள் தொடர்பில் சர்ச்சையை கிளப்பிய எம்.பி

தனியார் கல்வி நிறுவனத்தில் க.பொ.த.உயர் தரப் பரீட்சைக்கு முன்னர் வெளியிட்டிருந்த வினாத்தாளை ஒத்த வினாக்கள் இருந்ததாக சாமர சம்பத் தசநாயக்க எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – குழு நிலை விவாதத்தில் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் ஒதுக்கீட்டு விவாதத்திலேயே எம்.பி இதனை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து பேசிய அவர்,

உயர்தர பரீட்சை பொருளியல் வினாத்தாள் தொடர்பில் சர்ச்சையை கிளப்பிய எம்.பி | Gce Level Economics Question Paper Chamara Sampath

நுகேகொடை தனியார் கல்வி நிலையம்

நுகேகொடையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் க.பொ.த.உயர் தரப் பரீட்சைக்கு முன் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் க.பொ.த.உயர்தர பொருளியல் பாடத்தின் முதல் பகுதி வினாத்தாளில் பரீட்சை திணைக்களத்தால் வெளியிட்டிருந்த பொருளியல் பகுதி ஒன்றின் 50 வினாக்களில் 27 வினாக்கள் ஒரே மாதிரியானதாக இருந்துள்ளது.

அத்தோடு பொருளியல் பகுதி இரண்டில் 10 வினாக்களில் 5 வினாக்கள் தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு வழங்கியிருந்த வினாத்தாளில் வெளியிட்டிருந்த வினாக்களை ஒத்திருந்துள்ளாக நாடாளுமன்றத்தில் தெரிவித்து வினாத்தாள்களை சபைப்படுத்தினார்.

உயர்தர பரீட்சை பொருளியல் வினாத்தாள் தொடர்பில் சர்ச்சையை கிளப்பிய எம்.பி | Gce Level Economics Question Paper Chamara Sampath

இப்படி சென்றால் அனைவருக்கும் கல்வி என்பது எவ்வாறு சாத்தியமாகும்.மொனராகலை மாணவர்களுக்கு நுகேகொடைக்கு வந்து தனியார் கல்வி நிலையத்தில் படிக்க முடியுமா என கேள்வியெழுப்பினார்.

ஏற்கனவே க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் விஞ்ஞானம் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்