ரி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா(India) – இங்கிலாந்து(England) அணிகள் விளையாடவுள்ள நிலையில், போட்டியின் போது மழை பெய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் போட்டி நடைபெறுமா இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ரி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அரையிறுதி சுற்று போட்டிகள் நாளை(27) நடக்கவுள்ளது.
நாளை காலை 6 மணிக்கு முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா – ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
வானிலையில் மாற்றம்
இதனைத் தொடர்ந்து 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியானது நாளை இரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், கயானா வானிலை நிலவரம் போட்டி நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
இன்று கயானாவில் 90 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை காலை 60 சதவிகிதம் வரை வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இன்று கனமழை பெய்யும் பட்சத்தில் திட்டமிட்டபடி போட்டியை சரியான நேரத்தில் தொடங்குவதும் சந்தேகம் என்று தெரிய வந்துள்ளது.
அரையிறுதி போட்டி
இருந்தாலும் நேற்று வானிலை நிலவரம் சரியாகும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
ஏனென்றால் நேற்று 86 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், இன்று அது 60 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ரிசர்வ் நாளும் அறிவிக்கப்படவில்லை.
கூடுதலாக 250 நிமிடங்கள் வரை ஐசிசி நேரம் ஒதுக்கியுள்ளது. ஒருவேளை மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டால், இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
சூப்பர் 8 சுற்றில் முதலிடம் பிடித்துள்ளதால், இந்திய அணிக்கு இந்த சாதகமாக இது அமையும் என கூறப்படுகின்றது.