முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் கனிய மண் அகழ்வு: நிலத்தை இழந்தவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

மன்னாரில் (Mannar) கனிய மண் அகழ்விற்காக நிலத்தை இழந்தவர்கள் மன்னார் பொது
அமைப்புகளின் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அந்த ஒன்றியத்தின் தலைவர்
வி.எஸ்.சிவகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (28) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மன்னார் நகர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கனிய மண்
அகழ்விற்காக உள்ளூர் காணி முகவர்கள் மூலம் சட்ட விரோதமான முறையில் காணி
அபகரிக்கப்படுவதாக பல்வேறு விதமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

முகவர் நிறுவனங்களுக்கு விற்பனை

சில
குழுக்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியும் அதிகாரத்தை உபயோகித்தும் சாதாரண
மக்களின் காணிகளை அபகரித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

அத்துடன் பயன்படுத்தப்படாத நிலங்களுக்கு ஆட்சி உறுதிகளையும்
எழுதுவதாகவும் கூறுகின்றனர்.

மன்னாரில் கனிய மண் அகழ்வு: நிலத்தை இழந்தவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் | Excavation Fertile Soil In Mannar Urgent Request

அது மாத்திரமின்றி சில காணிகளுக்கு பயன்பாட்டில்
இல்லாத வேறு உறுதிகளை எல்லைகளை மாற்றி குறித்த இடங்களில் நில அபகரிப்பிலும்
ஈடுபடுகின்றனர். எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஆதாரங்களோடு குற்றம்
சாட்டுகின்றனர்.

இதில் இவ்வாறு முறைகேடான உறுதிப் பத்திரம் தயாரிப்புகளை சில சட்டத்தரணிகள்
மேற்கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகளை பல கோடி ரூபாய் பெறுமதிக்கு அவுஸ்ரேலியாவை
தளமாகக் கொண்டு கனிய மண் அகழ்வில் ஈடுபட உள்ள இலங்கை முகவர் நிறுவனங்களுக்கு
விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அவசர வேண்டுகோள்

ஆகவே சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த சட்டத்தரணிகள் சாமானிய மக்களின் இருப்பு
உரிமையாகிய நிலத்தை இவ்வாறான மோசடி கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவது என்பது
மிகவும் வேதனைக்குரிய விடயம்.

மன்னாரில் கனிய மண் அகழ்வு: நிலத்தை இழந்தவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் | Excavation Fertile Soil In Mannar Urgent Request

ஆகவே இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்கள் எங்களோடு தொடர்பு கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கிறோம்.

இந்த மோசடி கும்பலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுப்பதற்குரிய வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

ஆகவே நில அபகரிப்பாளர்களுக்கு அஞ்சாமல் முன்வருமாறு தங்களுக்கு வேண்டுகோள்
விடுக்கின்றோம். எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.