எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அதிபர் தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவுக்கு (India) விஜயம் செய்ய தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார (Ranjith Madduma Bandara) நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இதற்கான அழைப்பிதழ் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளதுடன் குறித்த பயணம் திட்டமிட்டு தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய பயணம்
இந்தநிலையில், தேர்தலுக்கு முன்னதாகவே இந்த விஜயம் இடம்பெறும் என வலியுறுத்திய ரஞ்சித் மத்துமபண்டார, தேர்தலுக்குப் பின்னர் செல்வதில் அர்த்தமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த அழைப்பிதழ் யாரிடம் இருந்து கிடைத்துள்ளது மற்றும் பயணத்தின் போது சஜித் எந்த முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார் என்ற தகவல்களை அவர் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.