இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த சிவசேனா கட்சியின் சிரேஷ்ட தலைவர் மீது பட்டப்பகலில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தீப் தாபர் என்ற தலைவர் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்கள்
இவர் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் பாதுகாப்புடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அவரை வழி மறித்த இனந்தெரியாத நபர்கள் அவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதன்போது தாக்குதலை தடுக்க முயன்ற காவல்துறை உத்தியோகத்தரை அங்கு வந்த மற்றொருவர் வீதி ஓரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கடுமையான தாக்குதலை அடுத்து அவர் தரையில் மயங்கி விழுந்துள்ளார். தாக்குதலாளிகள் அவர் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இரத்த வெள்ளத்தில்
இரத்த வெள்ளத்தில் வீதியில் கிடந்த சந்தீப் தாபர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும் அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீக்கியருக்கு எதிரான கருத்தை அவர் தெரிவித்த காரணத்தாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்ய்பட்டுள்ளனர். காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேறி்கொண்டு வருகின்றனர்.
https://www.youtube.com/embed/sykyM0C0JVc