கனமழை காரணமாக இந்தியாவின் (India) மும்பை (Mumbai) நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், நேற்று (07) இரவு தொடங்கி இன்று (08) காலை 7 மணி வரை மும்பையில் கனமழை பெய்துள்ளதாக மும்பை நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.
நகரின் சாலைகளும் தொடருந்து தண்டவாளங்களும் வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து, அங்குள்ள சில பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.
தொடர் கனமழை
மும்பையில் தொடர்ந்து கனமழை எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் முன்னுரைத்துள்ள நிலையில், வெள்ளம் மோசமடைந்து மேலும் பல பகுதிகள் கடுமையாகப் பாதிப்படையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
#WATCH | Maharashtra: The traffic slows down on Western Express Highway near Vile Parle as heavy rain lashes Mumbai city. pic.twitter.com/aAzQaayTqO
— ANI (@ANI) July 8, 2024
குறிப்பாக, வெள்ளம் காரணமாக இன்று (08) மும்பையில் உள்ள விரைவுச்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், சில தொலைதூர தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பலர் பாதிப்பு
இந்தநிலையில், கனமழை காரணமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் (Assam) உள்ள ஆறுகள் நிரம்பி வழிந்ததன் காரணமாக அப்பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#WATCH | Pedestrians and vehicles cross heavily waterlogged streets at King’s Circle amid rains in Mumbai
A commuter says, “My car is stuck on the road. There is no point in blaming the government for the rains. The government is doing its job.” pic.twitter.com/2v16Osb8NZ
— ANI (@ANI) July 8, 2024
இதன் விளைவாக 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்