முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின்
கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு கிளிநொச்சி தனியார் விருந்தகம்
ஒன்றில் நடைபெற்றது.

கிளிநொச்சி வடக்கு வலயத்திற்கு காலை 9.00மணிக்கும் கிளிநொச்சி தெற்கு
வலயத்திற்கு காலை 11.00மணிக்கும் இருவேறு நிகழ்வுகளாக நடைபெற்றன.

காலை ஆரம்பமான நிகழ்வில் விருந்தினர்களாக
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம் சாள்ஸ்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாட்டின் எதிர்காலம்

குறித்த நிகழ்வில் ஜனாதிபதியின் வடக்குக்கான சிரேஸ்ட மேலதிக செயலாளர் சமன்
பந்துலசேன, வடமாகாண ஆளுநரின் செயலாளர், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை
அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இரண்டு வலயங்களைச் சேர்ந்த 662 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்  வழங்கப்பட்டது.

/program-presidential-scholarship-school-students-

இதில் உரையாற்றிய வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம் சாள்ஸ் உலகில் இலவச கல்வி மற்றும் மருத்துவத்தை வழங்கும் நாடுகளில் இலங்கை
முன்னிலையில் நிற்கிறது.

மாணவர்களின் கல்வி அறிவும் ஆரோக்கியமும் நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியம்
என்பதற்காகவே நாடு பாரிய நெருக்கடியில் இருந்தாலும் ஜனாதிபதி இலவச கல்வியோடு
சேர்த்து உங்களுக்கு கொடுப்பனவை வழங்குகின்றார். கல்வி என்பது சமூகத்தை மாற்றுகின்ற ஆயுதமாக இருக்கிறது என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர் பிரச்சினை

உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் பாரபட்சமான முறையில் தான் அபிவிருத்தி மற்றும் முதலீடுகள்
இருந்தன.

/program-presidential-scholarship-school-students-

தற்போதைய ஜனாதிபதி அவ்வாறு இல்லை. கடந்த காலங்களில் எமக்கு கிடைத்த வாய்ப்புக்களை அன்று தமிழ் சமூகத்தை
பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் நாளைய விஜயத்தில் இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை பேசப்படுமா என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு நாளையதினம் நீர் வேளாண்மை மற்றும் முதலீட்டுக்கு
செல்வதால் கடற்றொழிலாளர் பிரச்சினை வேறொரு தினத்தில் பேசப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.

மேலதிக தகவல் – எரிமலை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.